அரசு பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு அறிவுரை.. அரசு விரைவு போக்குவரத்து கழகம்..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த 1 ஆம் தேதி முதல் மாவட்டத்திற்குள் பேருந்து சேவை துவங்கப்பட்ட நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை அடுத்து, நாளை (7 செப்டம்பர் 2020) முதல் தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

சாலை வரி ரத்து உள்ளிட்ட தங்கள் தரப்பு கோரிக்கையை நிறைவேற்றும் பட்சத்தில், ஆம்னி பேருந்துகளை இயக்க தயாராக இருப்பதாக உரிமையாளர்கள் அறிவித்தனர். தமிழக அரசின் உத்தரவினை தொடர்ந்து அரசு பேருந்துகளில் சீரமைப்பு பணி, கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் போன்றவை முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

தமிழகத்தில் மொத்தமாக 1,184 விரைவு பேருந்துகள் உள்ள நிலையில், முதற்கட்டமாக 524 பேருந்துகள் நாளை முதல் இயக்கப்படவுள்ளது. இந்த பேருந்துகளுக்கான முன்பதிவு நேற்றுமுதல் துவங்கி நடைபெற்று வருகிறது. ஆறாம் தேதி நள்ளிரவு முதல் தொலைதூர பயணத்திற்கான அரசு விரைவு பேருந்துகள் இயங்கவுள்ளது. 

இதற்காக சென்னை, திருச்சி, திருநெல்வேலி, மதுரை, திருப்பூர், கோவை, தஞ்சாவூர் உள்ளிட்ட இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படவுள்ள நிலையில், ஓட்டுனர்களுக்கு தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவுரை வழங்கியுள்ளது. 

இதில், கடந்த 5 மாத காலமாக பேருந்துகளை இயக்கவில்லை. இதனால் இரவில் பேருந்துகளை ஓட்டுனர்கள் கவனமுடன் இயக்க வேண்டும் என்றும், நள்ளிரவு 12 மணிமுதல் காலை 4 மணிவரை பேருந்து நடத்துனர்கள் தங்களின் இருக்கையில் அமர்ந்து, ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், மிகுந்த கவனத்துடன் அனைவரும் பணியாற்ற வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu Public Bus Transport Advice for Bus Drivers and Conductors


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->