1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை எப்போது.? தமிழக அரசு இன்று ஆலோசனை.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் தீர்க்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதுமட்டுமல்லாமல் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி உள்ளதால் பெரும்பாலான மாவட்டங்களில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் இன்று முதல் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்குகிறது.

இன்று முதல் மே 28ம் தேதி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை தொடக்கப் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை எப்போது என இன்று முடிவு செய்யப்படும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிப்பது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உடன் ஆலோசிக்க உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu school summer holidays


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->