தனிஷ்கின் ரிவா திருமண நகைத் தொகுப்புகள் அறிமுகம்.!
Tanishkin Riva Wedding Jewellery Collections Launched
தனிஷ்கின் வசீகரமான ரிவா நகைத் தொகுப்புடன் இந்தக் கோடைக்கால திருமண வைபவங்களைக் கொண்டாட ரிவா, நவீனகால மணப்பெணுக்கு மரபில் வேரூன்றிய திருமண நகைகளை அறிமுகம் செய்துள்ளது.
அட்சய திருதி பண்டிகை மற்றும் தனிஷ்கின் திருமண நகைகளுக்காக துணை பிராண்டான ரிவா கோடைக்காலத்தில் வரவிருக்கும் இந்தியத் திருமண வைபவங்களை மகிமைப்படுத்த அற்புதமும் கலைநயமும் கொண்ட மணப்பெண்களுக்கான நகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் திருமணச் சடங்குகளும் மரபுகளும் பன்முகத்தன்மை வாய்ந்தவை. இதை ஆழமாகப் புரிந்துகொண்ட தனிஷ்கின் திருமண நகைத்தொகுப்பான ரிவா, நிச்சயதார்த்தம் முதல் முகூர்த்தம், வரவேற்பு வரை வெவ்வேறு தருணங்களுக்கு ஏற்றவாறு முழுமையான நகைகளை வடிவமைத்துள்ளன.
தனிஷ்கின் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரியான பெல்கி ஷெரிங் கூறியதாவது:
தென் இந்திய கலாசாரத்தில் நகைகள் வாங்குவது கலாசாரத்தில் வேரூன்றிய ஒன்றாக உள்ளது. வளமை மற்றும் மரபின் அடையாளமும் கூட. திருமணங்கள் மற்றும் அட்சய திருதியை ஆகிய நாள்களைச் சுற்றி நிறைய நகைகளை வாங்குவது இங்கு ஒரு பாரம்பரியமாக இருந்து வருகிறது. இந்தப் பின்னணியில் நவீன தன்மையுடன் கலாச்சார நுண்ணுணர்வுகளுடன் வடிவமைக்கப்படும் நகைகளுக்கு எப்போதும் வாடிக்கையாளர்களிடம் மவுசு அதிகம் இருந்து வருகிறது. தனிஷ்கின் ரிவா நகைத் தொகுப்புகள், அதற்கான விடையைத் தருகின்றன. பரம்பரைச் சொத்தாக மதிப்பளிக்கும் இயற்கை வைர நகைகள், நகைகளை பாதுகாப்பாக பேண வேண்டுமென்ற ஆவல் அதிகரித்துவரும் இன்றைய சூழலுக்கு உகந்தவை. தலைமுறை தலைமுறையாக தொடர்வதற்கு ஏற்ற வகையில் தங்க நகைகளும் காலம்தாண்டிச் செல்லும் மதிப்போடும் உள்ளூர் கலைத்துவத்தோடும் படைக்கப்பட்டுள்ளன. ஒரு பிராண்டாக, மரபுக்குள்ளேயே புதுமையையும் உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறோம் என்றார்.

English Summary
Tanishkin Riva Wedding Jewellery Collections Launched