இந்திய அரசியலமைப்பைக் காப்போம்' பிரச்சாரப் பொதுக்கூட்டம்..காங்கிரஸ் தொண்டர்களுக்கு வைத்திலிங்கம் MP அழைப்பு!  - Seithipunal
Seithipunal


வருகின்ற 03.05.2025 சனிக்கிழமை மாலை 4 மணியளவில் பாண்டி-கடலூர் சாலையில், காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பில் 'இந்திய அரசியலமைப்பைக் காப்போம்'  என்கிற தலைப்பில் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.ஆகவே காங்கிரஸ் தொண்டர்களுக்கு வைத்திலிங்கம் MP அழைப்புவிடுத்துள்ளார்.

புதுச்சேரி பிரதேசக் காங்கிரஸ் கமிட்டி தலைவரும் ,பாராளுமன்ற மக்களவைஉறுப்பினருமான வைத்திலிங்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:அன்பார்ந்த காங்கிரஸ் பேரியக்கத்தின் நிர்வாகிகளுக்கு வணக்கம்!வருகின்ற 03.05.2025 சனிக்கிழமை மாலை 4 மணியளவில் பாண்டி-கடலூர் சாலையில், சிந்தனை சிற்பி சிங்காரவேலர் சிலை அருகில், நமது காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பில் 'இந்திய அரசியலமைப்பைக் காப்போம்'  என்கிற தலைப்பில் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது!

இப் பொதுக்கூட்டம், அரசியலமைப்பு நிறுவனங்களை பாஜக மோடியின் ஒன்றிய அரசு தொடர்ந்து சீர்குலைத்து வருவது குறித்தும்;  குறிப்பாக, குடியாட்சித் தத்துவத்தை வலுவிழக்கச் செய்யும் நோக்கத்தோடு பாராளுமன்றத்தின்  முனைப்பு படிப்படியாகக் குன்றும் வகையில் அதன் செயல்பாடுகளை சீர்குலைத்து வருவது குறித்தும்; கூட்டாட்சித் தத்துவம் மீதான தாக்குதல்கள் குறித்தும்; கருத்துச் சுதந்திரம் பறிக்கப்படுவது குறித்தும்; பயங்கரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளிடமிருந்து நாட்டு மக்களைக் காக்கத் தவறியது குறித்தும்; எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது அவர்களது மாண்பைக் குறைக்கும் உள்நோக்கோடு புனையப்படும் பொய் வழக்குகள் குறித்தும் மற்றும் பிரிவினைவாத, வெறுப்பு பிரச்சாரத்தை முறியடிப்பது  ஆகியவற்றை முன்னிறுத்தி நடைபெறும் மாபெரும் பொதுக் கூட்டம் ஆகும்!

எனவே, தாங்கள் திரளாக வருகை தந்து இப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்புதுச்சேரி பிரதேசக் காங்கிரஸ் கமிட்டி தலைவரும் என ,பாராளுமன்ற மக்களவைஉறுப்பினருமான வைத்திலிங்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Save the Constitution of India campaign meeting Vaithilingam MP invites Congress workers


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->