திடீரென பற்றியெரிந்த பெரிய கோயில் அகழி: தஞ்சையில் பரபரப்பு! - Seithipunal
Seithipunal


உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலை ஒட்டி உள்ள அகழியில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தஞ்சை பெரிய கோவிலுக்கு பிற மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். 

தஞ்சை பெரிய கோவில் முகப்பு பகுதியில் உள்ள அகழி பராமரிக்கப்படாமல் தண்ணீரின்றி கோட்டை சுவர்கள் சேதம் அடைந்து குப்பை கழிவுகளாக உள்ளது.

இந்நிலையில் ராஜராஜ சோழன் சிலை பின்புறம் உள்ள அகழியில் இன்று காலை திடீரென தீ பற்றி எரிந்ததால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. 

இது குறித்த தகவல் அறிந்த மாநகராட்சி பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு இணைந்து சென்று தீயை வேகமாக அணைத்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. 

மேலும் சாலையோர கலைகளில் இருந்து கொட்டப்பட்ட குப்பைகளிலிருந்து தீப்பற்றி இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tanjore fire accident issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->