மக்கள் எதிர்த்தால் டாஸ்மாக் மது கடையை மூடுங்க! அடாவடி செய்யாதீங்க - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! - Seithipunal
Seithipunal


பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அந்த டாஸ்மாக் மது கடையை மாற்ற வேண்டும் என்று, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

போலி மதுபானம் விற்றதாக போலியாக பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி சுந்தர் என்பவர் தொடர்ந்து வழக்கில், இந்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. 

மேலும் இந்த வழக்கில், டாஸ்மார்க் நிர்வாக இயக்குனர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் ஆகினார். 

அப்போது குத்தகை காலம் முடிந்து கடையை காலி செய்யாதது ஏன்? என்று கேட்டால் போலீசை வைத்து வழக்கு பதிவு செய்வதா என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

மேலும், ஏன் இப்படி அடாவடி செய்கிறீர்கள்? என்றும் டாஸ்மாக் மேலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியதுடன், குத்தகை காலம் முடிந்து விட்டால் மதுபான கடையை காலி செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது. 

மேலும் இதுகுறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்த டாஸ்மார்க் நிர்வாக இயக்குனருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TASMAC case Chennai HC Order DMK MKStalin


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->