டாஸ்மாக் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்த தமிழ்நாடு அரசு! - Seithipunal
Seithipunal


தமிழக அரசு டாஸ்மாக் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸை இன்று அறிவித்துள்ளது.

வரும் அக்.31 தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு தமிழக அரசின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

குறிப்பாக அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி, டி பிரிவு ஊழியர்களுக்கு 20 சதவிகிதம் போனஸ் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் சி, டி பிரிவு ஊழியர்களுக்கு 20 சதவிகிதம் போனஸ் வழங்கப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, டாஸ்மாக் ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ரூ.16,800 வரை போனஸ் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TASMAC Deepavali Bonus


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->