டாஸ்மாக் லாரி விபத்து..மதுபானங்களை எடுத்து சென்ற மக்கள்.!!
Tasmac lorry accident liquor gave people
வேலூர் மாவட்டம் டாஸ்மார்க் குடோனில் இருந்து வாணியம்பாடி மற்றும் நாட்றம்பள்ளியில் செயல்பட்டு வரும் டாஸ்மார்க் மதுபான கடைகளுக்கு மது பாட்டில்களை ஏற்றி சென்ற லாரி ஆம்பூர் அடுத்த மாராபட்டு சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் லாரி சென்று கொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டத்தை இழந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் லாரியில் கொண்டு செல்லப்படும் 790 கேஸ் மது பாட்டில்கள் ரோட்டில் சிதறி கிடந்தன.
திருப்பத்தூர் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகளும் அப்பகுதி மக்களும் சிதறிய முதல் பாட்டில்களை எடுக்க தொடங்கினர். மதுபாட்டுகளை ஏற்றி சென்ற ராலி ஓட்டுநரும் கிளினரும் தடுக்க முயற்சி செய்தனர். பின்னர் அப்பகுதி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பெயரில் அங்கு வந்த போலீசார், மது பாட்டில்களை பொறுக்கிக் கொண்டிருந்த பொது மக்களை விரட்டி அடித்தனர். இதனால், சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஆனது பாதிக்கப்பட்டது. மது பாட்டில்களின் மதிப்பு சுமார் 38 லட்சம் இருக்கும் என்று டாஸ்மார்க் அதிகாரிகள் தெரிவித்தனர்.
English Summary
Tasmac lorry accident liquor gave people