தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டுவர முடியாது - திருமாவளவனுக்கு அதிர்ச்சி கொடுத்த திமுக அமைச்சர்! - Seithipunal
Seithipunal


திமுகவின் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி இன்று மதுவிலக்கு மாநாடு ஒன்றை உளுந்தூர்பேட்டைகள் நடத்தி வருகிறது.

இந்த மாநாட்டில் மொத்தம் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக, டாஸ்மார்க் கடைகளை படிப்படியாக மூடி, கால அட்டவணை நிர்ணயித்து மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற ஒரு தீர்மானத்தையும் நிறைவேற்றி உள்ளது.

மேலும், இதனால் வேலை இழக்கும் டாஸ்மார்க் ஊழியர்களுக்கு மாற்று வேலை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், அமைச்சர் ரகுபதி தமிழகத்தில் மட்டும் மதுவிலக்கை கொண்டுவர முடியாது என்று, திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவிக்கையில், "மது ஒழிப்பு என்பது மாநில அரசால் எடுக்க முடியாது. மத்திய அரசுதான் செய்ய வேண்டும். 

நாடு முழுவதும் மது ஒழிப்பு கொண்டு வர வேண்டும். தமிழகத்தில் மட்டும் செய்ய முடியாது. எல்லா மாநிலங்களிலும் மது ஒழிப்பை கொண்டு வந்தால், தமிழகத்தில் கொண்டு வருவோம்" என்று தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அமைச்சர் ரகுபதி, காந்தி மண்டபத்தை சுத்தம் செய்த ஆளுநருக்கும், கேமராமேன் கண்களுக்கு மட்டும் மது பாட்டில் தெரிந்திருக்கிறது. சுத்தம் செய்யும் பணிகளை சென்னை மாநகராட்சி சிறப்பாக செய்து வருகிறது. ஆளுநர் ரவி தனது பதவியை மறந்து அரசியல் செய்து வருகிறார். அவர் பதவியை விலக வேண்டும் என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TASMAC TNGovt DMK VCK Thirumavalavan


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->