டாஸ்மாக் வீரனுக்கு ஆப்பு! மது பிரியர்களே உஷார்! அதிரவைக்கும் செய்தி!
TASMAC Veeran Liquor issue
தமிழக அரசின் டாஸ்மாக் கடைகளில் மூன்று வகையான மதுபானங்களை திரும்பப் பெறுவதாக, டாஸ்மார்க் நிர்வாகம் அதிரடியாக அறிவித்துள்ளது.
மேலும் வரையறுக்கப்பட்ட அளவுக்கு மீறி அல்லது குறைவாக இந்த மதுபானங்களில் ஆல்கஹால் இருந்ததால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
வரையறுக்கப்பட்ட அளவுக்கு ஆல்கஹால் இருந்தால் மட்டுமே அந்த மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும் என்றும், அப்படி இல்லை என்றில் அதனை விற்பனை செய்யக்கூடாது என்றும் டாஸ்மார்க் கடை ஊழியர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
உதாரணமாக மதுபானங்களை ஆல்கஹால் (எத்தனால்) அளவு 48.2 சதவீதம் இருக்க வேண்டும். கலவையில் 50 சதவீதம் எடையாகவும் அது இருக்க வேண்டும்.
இந்த நிலையில், ஒரு சில குறிப்பிட்ட மதுபானங்களில் வரையறுக்கப்பட்ட அளவைவிட ஆல்கஹால் குறைவாகவும், சிலவற்றில் அதிகமாக இருப்பதாகவும் டாஸ்மார்க் நிர்வாகத்திற்கு தெரிய வந்தது.
அதன்படி, டிராபிகானா விஎஸ்ஓபி பிராந்தி, ஓல்ட் சீக்ரெட் பிராந்தி மற்றும் வீரன் ஸ்பெஷல் பிராந்திகளில் ஆல்கஹால் வரையறுக்கப்பட்ட அளவு இல்லாதது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, டிராபிகானா விஎஸ்ஓபி பிராந்தி, ஓல்ட் சீக்ரெட் பிராந்தி மற்றும் வீரன் ஸ்பெஷல் பிராந்தி ஆகிய மூன்று வகையான மதுபானங்களையும் விற்க வேண்டாம் என்றும், அவற்றை திருப்பி அனுப்புமாறும் டாஸ்மாக் கடைகளுக்கு சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
TASMAC Veeran Liquor issue