நெல்லையில் இன்று மதுக்கடைகள் அடைப்பு!
Tasmacs closed today in Nellai!
ஒண்டிவீரன் நினைவுதினத்தை முன்னிட்டு நெல்லையில் இன்று மதுக்கடைகள் அடைக்கப்பட உள்ளன.
நெல்லை: ஒண்டிவீரன் நினைவுதினத்தை முன்னிட்டு நெல்லையில் மதுக்கடைகள் அடைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி பாளையங்கோட்டை தாலுகா திருச்செந்தூர் ரோட்டில் விடுதலை போராட்ட வீரர் ஒண்டிவீரன் மணிமண்டபம் அருகே உள்ள 10836, 10641, 10736, 10618, 10732 ஆகிய அரசு மதுபான கடைகள், அத்துடன் இணைந்த மதுபான கூடங்கள் ஆகியவை இன்று (செவ்வாய்க்கிழமை) ஒருநாள் மட்டும் மூடப்பட்டு இருக்கும்.
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்து உள்ளார்.
English Summary
Tasmacs closed today in Nellai!