டாடா நிறுவனம் தமிழர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு தருகிறது! அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டத்தை அடுத்த தேன்கனிக்கோட்டையில் அமைந்துள்ள டாடா நிறுவனத்தில் தமிழர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு அளிக்கப்படுவதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "டாட்டா எலக்ட்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மின்னணு பொருட்களை உற்பத்தி செய்வதற்காக தனது தொழிற்சாலையை கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகாவில் உள்ள ஜி.எம்.ஆர் தொழில் பூங்காவில் சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பில் அமைத்து வருகிறது.

சுமார் 4,684 கோடி ரூபாய் முதலீட்டில் அமைய உள்ள இந்த தொழிற்சாலை மூலம் ஏறத்தாழ 18 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்த தொழிற்சாலையில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு அளிக்கப்படுவதாக பத்திரிக்கை செய்திகளும் புகார்களும் அரசுக்கு வந்து கொண்டிருக்கிறது.

இந்த நிறுவனம் தற்போது வரை தமிழகத்தைச் சேர்ந்த ஏறத்தாழ 5500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளது. வணிக ரீதியிலான உற்பத்தி தொடங்கும் போது பணியாளர்களில் 80 விழுக்காடு பணியிடங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் நியமிக்க டாடா நிறுவனம் உறுதி அளித்துள்ளது.

டாடா நிறுவனத்தின் பணி நியமனத்தில் தமிழ்நாட்டைச் சார்ந்த பணியாளர்கள் எண்ணிக்கை அதிகப்படுத்துவதை உறுதி செய்யும் பொருட்டு தொழில் முதலீடு ஊக்குவிக்கும் வர்த்தகத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அரசு முதன்மைச் செயலாளர் ஆகியோர் டாடா நிறுவனத்துடன் கலந்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். 

டாட்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் சார்பாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையில் வாயிலாக பல்வேறு மாவட்டங்களில் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்களில் 7,559 நபர்கள் கலந்து கொண்டனர் அவர்களின் 1993 நபர்களுக்கு தற்போது வேலை வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மூன்று நாட்கள் நடத்தப்பட்ட வேலை வாய்ப்பு முகாமில் 895 பேர் கலந்து கொண்டனர். அதில் 355 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தமிழ்நாட்டை சார்ந்த நபர்களுக்கு டாடா நிறுவனத்தால் வேலைவாய்ப்பு வழங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று தமிழ்நாட்டில் அமைந்துள்ள தொழில் நிறுவனங்களும் தமிழ்நாட்டைச் சார்ந்த நபர்களுக்கு வேலைவாய்ப்பு முன்னுரிமை வழங்குவதை இந்த அரசு உறுதி செய்யும்" என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tata company gives more job opportunities to Tamil people


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->