பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - அரியலூரில் ஆசிரியர் கைது.! - Seithipunal
Seithipunal


அரியலூரில் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் ராஜீவ் காந்தி. இவர் தனது பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவருக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். 

இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த சிறுமி, ஆசிரியர் தன்னிடம் அத்துமீறி நடந்து கொள்வது குறித்து தனது பெற்றோரிடம் கூறி உள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர், சம்பவம் குறித்து அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன் படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் ஆசிரியர் ராஜீவ் காந்தியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

teacher arrest for harassment in ariyalur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->