இரவு நேரங்களில் பள்ளி மாணவருக்கு பாலியல் தொந்தரவு - ஆசிரியை கைது - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில் இரவு நேரங்களில் 10ஆம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியை போகோவில் கைது செய்யப்பட்டார்.

திருச்சி மாவட்டம் வலையப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தேவி (40). இவர் துறையூரில் உள்ள ஒரு பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். மேலும் இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த சில மாதங்களாக புரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், தேவி, தன்னிடம் டியூசன் படித்து வந்த 10ஆம் வகுப்பு மாணவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதையடுத்து மாணவனின் நடவடிக்கையில், சந்தேகம் அடைந்த மாணவனை கண்காணித்துள்ளனர். அப்பொழுது ஆசிரியை தேவி இரவு நேரங்களில், செல்போனில் மாணவருடன் பேசி பாலியல் தொல்லை கொடுத்து தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மாணவரின் பெற்றோர் இது குறித்து முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியர் தேவியை கைது செய்தனர். மேலும் போலீசார், பாதிக்கப்பட்ட மாணவரை குழந்தைகள் நல காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Teacher arrested for sexually harassing a school student in Trichy


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->