திருப்பத்தூர் அருகே பரிதாபம்.! அரசு பள்ளி ஆசிரியை ரயில் முன் பாய்ந்து தற்கொலை..! - Seithipunal
Seithipunal


திருப்பத்தூர் மாவட்டத்தில் ரயில் முன் பாய்ந்து அரசு பள்ளி ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சதாசிவம்(43). இவரது மனைவி அனிதா (38). இவர் குனிச்சி மோட்டூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சதாசிவத்திற்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அனிதா, வாழ்க்கையில் வெறுப்படைந்து இன்று அதிகாலை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார், அனிதாவின் உடலை கைப்பற்றிய பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், கணவருடன் ஏற்பட்ட தகராறில் அனிதா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Teacher committed suicide by jumping in front of the train in Tirupattur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->