தற்காலிக தடை!....சுற்றுலா பயணிகளே உஷார்!
Temporary ban Tourists beware
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள குற்றாலம் அருவிகளில் சீசன் முடிந்த நிலையிலும் அவ்வப்போது பெய்யும் மழையால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழுகிறது. சில நாட்களாக மழை இல்லாததால் நீர் வரத்து படிப்படியாக குறைய தொடங்கிய நிலையில் நேற்று முன்தினம் திடீரென மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கனமழை பெய்தது.
இதன் காரணமாக குற்றாலத்தில் உள்ள ஐந்தருவி பகுதியில் திடீரென தண்ணீர் வரத்து அதிகரித்ததால் பாதுகாப்பு கருதி அங்கு சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று மாலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் திடீரென பெய்த மழை காரணமாக ஐந்தருவி, மெயின் அருவியில் நீர்வரத்து அதிகரித்தது.
இந்த நிலையில் ஐந்தருவியில் மிதமான அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க தற்காலிகாமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் குற்றாலம் பகுதியில் விட்டுவிட்டு சாரல் மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி ரம்மியாக உள்ளது. இதற்கிடையே மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவியிலும் தண்ணீர் சீராக விழுவதால் அங்கு சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர்.
English Summary
Temporary ban Tourists beware