கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தற்காலிக தமிழ் ஆசிரியர்கள் நியமனம்.!
temporary tamil teachers appointed in kendiriya vidyalaya school
இந்தி திணிப்புக்கு எதிராக தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதற்கிடையே தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் மத்திய அரசின் முப்பத்து நான்கு கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒரு தமிழ் ஆசிரியர் கூட இல்லை என்று தி.மு.க. எம்.எல்.ஏ. எழிலன் பரபரப்பு குற்றச்சாட்டினை முன்வைத்தார்.
ஆர்.டி.ஐ. மூலம் பெறப்பட்ட இந்த தகவல் மூலம், தமிழக மாணவர்கள் பயிலும் பள்ளிகளில், தாய்மொழி தமிழை கற்றுக்கொடுக்க ஒரு ஆசிரியர் கூட இல்லை. அதேசமயம், சமஸ்கிருதம் மொழியை பயிற்றுவிக்க 15 ஆசிரியர்களும், இந்தி மொழியை பயிற்றுவிக்க 52 ஆசிரியர்களும் கேந்திரியா வித்யாலயா பள்ளிகளில் இருப்பது உறுதியானது. இது மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு ஒரு உதாரணம் என தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டி இருந்தன.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவாரூரில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை ஒப்பந்த முறையில் தேர்வு செய்ய அறிவிப்பு வெளியானது. அதன்படி தமிழ் உட்பட பல்வேறு பாடங்களுக்கும், பயிற்சியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு கடந்த மாதம் 24-ம் தேதி நேரடி நேர்காணல் நடத்தப்பட்டது
இதைத் தொடர்ந்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கேந்தரியா வித்யாலயா பள்ளி மற்றும் இலுப்பைக்குடியில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் தமிழ் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.
English Summary
temporary tamil teachers appointed in kendiriya vidyalaya school