பி.எட் முடித்தவர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு...அரசுப்பள்ளிகளில் வேலை..! - Seithipunal
Seithipunal


பள்ளிக்கல்வித்துறை சார்பில், தமிழகத்தில் மாற்றுப்பணியில் சென்ற 182 ஆசிரியர்களுக்கு பதில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

அதாவது, இல்லம் தேடிக்கல்வி திட்ட கட்டகங்கள் தயாரிப்பு பணி, மொழிபெயர்ப்பு பணி, மின் பாடப்பொருள் தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ள அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. 

இந்நிலையில், 182 தற்காலிக ஆசிரியர்கள் பள்ளி மேலாண்மைக்குழுக்கள் மூலமாக நியமனம் செய்ய பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவிட்டுள்ளது. மேலும், தற்காலிக ஆசிரியர்களை ரூ.7,500,ரூ.10,000,ரூ.12,000 போன்ற ஊதியத்தில் நியமித்துக்கொள்ளலாம்.

தற்காலிக ஆசிரியர்களை தலைமை ஆசிரியர்களே நியமனம் செய்துகொள்ளலாம். பள்ளிகளில் நியமனம் செய்துள்ள தற்காலிக ஆசிரியர் நியமனத்தை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

temporary teachers appointment in government schools


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->