அதிகாலையில் அதிர்ச்சி - ராமேஸ்வர மீனவர்கள் 10 பேர் கைது.!
ten rameshwaram fisherman arrested
ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறி, இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர் கதையாகி வருகிறது.

அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதுவதும் தொடர் கதையாகி வருகிறது.
இந்த நிலையில் இன்று ராமேஸ்வரத்தை சேர்ந்த10 மீனவர்களை இலங்கை கடல் எல்லையில் மீன்பிடித்ததாக கூறி 3 விசைப் படகுகளுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். 10 மீனவர்களையும் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வாரம் இலங்கை வடக்கு மன்னார் கடற்பரப்பில் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த 14 பேரை கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
English Summary
ten rameshwaram fisherman arrested