அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரேவுக்கு பதில் ஜெராக்ஸ்? நடந்தது என்ன? ஆட்சியர் விளக்கம்!
Tenkasi hospital Xray issue
தென்காசி தலைமை அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே-க்கு பதிலாக ஜெராக்ஸ் எடுத்துக் கொடுத்ததாக பிரபல தனியார் செய்தி ஊடகம் ஒன்றி செய்தி வெளியிட்டு இருந்தது.
மேலும், அதில், தலைமை அரசு மருத்துவமனையில் கையில் எலும்பு முறிவு என வந்த நோயாளிக்கு, எக்ஸ்ரே ஃபிலிம்-க்கு பதிலாக ஜெராக்ஸ் எடுத்து கொடுத்துள்ளதாகவும் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், தென்காசி மாவட்ட ஆட்சியர் இதனை மறுத்துள்ளார். மேலும் இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "டிஜிட்டல் எக்ஸ்ரேக்கு பிஏசிஎஸ் வசதி உள்ளது.
X-ray எடுக்கப்பட்டவுடன் கணினிகளில் (OP, Casualty, etc) Xray ஃபிலிம் காட்டப்படும். Xray ஃபிலிமிற்காக நோயாளிகளிடமிருந்து 50 ரூபாய் வசூலிக்கப்பட்டது.
நோயாளிகளுக்கு பேப்பர் பிரிண்ட் இலவசமாக வழங்கப்படுகிறது. தேவைக்கேற்ப படம் 50 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Tenkasi hospital Xray issue