பிப்ரவரி 7 மனிதநேய மக்கள் கட்சியின் 17 ம் ஆண்டு தொடக்க விழா..ஆயிரம் நபர்களை கட்சியில் இணைக்க முடிவு!  - Seithipunal
Seithipunal


மனிதநேய மக்கள் கட்சியின் 17ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு திருச்சியில் ஆயிரம் நபர்களை கட்சியில் இணைக்கும் விழா நடத்த நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு.

திருச்சியில் மனிதநேய மக்கள் கட்சியின் மேற்கு மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, வார்டு/கிளை தலைவர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் பைஸ் அகமது MC தலைமையில் நடைபெற்றது.மமக மாவட்ட செயலாளர் இப்ராஹிம், தமுமுக மாவட்ட செயலாளர் இப்ராஹிம் ஷா, மாவட்ட பொருளாளர் ஹுமாயூன் கபீர், தலைமை செயற்குழு உறுப்பினர் சபீர் முன்னிலை வகித்தனர்.

IT Wing மாநில துணை செயலாளர் நஜீர் அவர்கள் சமூக வலைதளங்களில் நிர்வாகிகள் செயல்பாடுகள் மற்றும் அரசியல் பணிகளை விளக்கி உரையாற்றினர்.ஐபிபி மாநில துணை செயலாளர் முகமது ரபீக் தேர்தல் அரசியலில் மமக வின் கடந்த கால பணிகளை நினைவுபடுத்தி வரும் சட்டமன்ற தேர்தலில் இஸ்லாமிய சமுதாய மக்களின் வாக்குகளை ஒருங்கிணைக்கும் சக்தியாக மனிதநேய மக்கள் கட்சி செயல்படும் வகையில் நிர்வாகிகள் பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தி பேசினார்.

மாவட்ட தலைவர் பைஸ் அகமது MC பேசும் போது களப்பணியில் சுணக்கம் இல்லாமல் பணியாற்ற வேண்டும் என்றும் , பிப் 07 அன்று மனிதநேய மக்கள் கட்சியின் 17 ம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சிகளை வெகு சிறப்பாக நடத்த வேண்டும் என நிர்வாகிகளை கேட்டுக் கொண்டார்.

மமக மாவட்ட செயலாளர் இப்ராஹிம், தமுமுக மாவட்ட செயலாளர் இப்ராஹிம் ஷா ஆகியோர் நிர்வாக செயல்பாடுகள் குறித்து பேசினர்.மாவட்ட பொருளாளர் ஹுமாயூன் கபீர் தீர்மானங்களை வாசித்தார்.பிப் 07 முதல் 09 வரை மமக தொடக்க விழா நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்துவது என்றும்,சாலையோர வியாபாரிகள், வணிகர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், இளைஞர்கள், பெண்கள் என

ஆயிரக்கணக்கானோர் மமக வில் இணையும் விழாவை வெகு சிறப்பாக நடத்துவது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.முடிவில் மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணி செயலாளர் வழ ஆலம் நன்றியுரை ஆற்றினார்.

இக்கூட்டத்தில் மமக மாவட்ட துணை தலைவர் மணவை அக்பர், மாவட்ட துணை செயலாளர்கள் இம்ரான், அசாருதீன், அப்துல் சமது, அப்துல் ரகுமான், தர்ஹா சமது உள்ளிட்ட மாவட்ட அணிகளின் செயலாளர்கள், பகுதி நிர்வாகிகள் நகர ஒன்றிய நிர்வாகிகள் வார்டு கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

February 7 17th anniversary of Manithaneya Makkal Katchi Decision to induct 1,000 people into the party


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->