கள்ளக்குறிச்சியில் பயங்கர விபத்து!...இருசக்கர வாகன விபத்தில் 2 பேர் பலியான சோகம்!
Terrible accident in kallakurichi tragedy 2 killed in two wheeler accident
கள்ளக்குறிச்சி மாவட்டம், ஆற்றுமாமனந்தல் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் மூரார்பாளையத்தில் இருந்து அழகாபுரம் நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது சங்கருக்கு பின்னால் வந்த இருசக்கர வாகனம் ஒன்று சங்கர் வாகனம் மீது மோத நேர்ந்தது.
இதனால் வாகனங்கள் மோதாமல் இருப்பதற்காக முனீஸ் தனது வாகனத்தை திருப்பிய போது, எதிரே வந்த அமாவாசை என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அமாவாசை என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில், காயமடைந்த முனீஸ் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட அழைத்து செல்லப்பட்டார். இருந் போதிலும், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவரும் உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விபத்தில் சிக்கிய இரண்டு இருசக்கர வாகனங்களையும் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர்.மேலும் இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள கள்ளக்குறிச்சி போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Terrible accident in kallakurichi tragedy 2 killed in two wheeler accident