திருப்பூரில் பயங்கர விபத்து!...நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பலியான சோகம்! - Seithipunal
Seithipunal


அவிநாசி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில், சகோதரிகள் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர்  மாவட்டம், அவிநாசி அருகே சாலையோரம் லாரி ஒன்று நின்று கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது சாலையில்  சென்ற கார், நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி பயங்கர விபத்திற்கு உள்ளாக்கியது.

இந்த கோர விபத்தில், சகோதரிகள் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் அபர்ணா, ஹேமா மற்றும் மோனிஷ் ஆகியோர் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.

இவர்கள் மூன்று பேரும், பெங்களூருவில் இருந்து கோவைக்கு சொகுசு காரில் சென்றதும், அப்போது கார் நிலைதடுமாறி  லாரி மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த விபத்து கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்ததால் ஏற்பட்டதா அல்லது வேறு ஏதாவது காரணமா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் இது  தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Terrible accident in tirupur tragedy 3 people died in an accident where a car collided with a standing lorry


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->