சாவில் அரசியல் செய்யுறாங்களே.. கொந்தளிக்கும் தமிழச்சி தங்கபாண்டியன்! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தியதில் பலர் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஷச்சாராயம் அருந்தியதில்  இதுவரை 55 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  

இந்த நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் பலர் விஷச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களை கள்ளக்குறிச்சி சென்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே தி.மு.க. எம்.பி தமிழச்சி தங்கபாண்டின் தனது x பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் "கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களை தமிழ்நாடு அரசின் நிவாரண உதவிகள் மீட்டெடுக்கட்டும். மேலும், இதுபோன்று விஷச்சாராய சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது. 

இது குறித்து விசாரணை மேற்கொள்ள அதிகாரிகள் மாற்றப்பட்டு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், நேற்று நடைபெற்ற உயர் அதிகாரிகள் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். 

சாவில் அரசியல் செய்து கொண்டிருக்கும் எதிர்கட்சியினர் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறந்து விடப்பட்டதை மூடி மறைக்கப் பார்த்தவர்களைப் போல் இல்லாமல் துணிச்சலாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அரசே மக்களுக்கான அரசு! இந்த விஷச்சாராய சம்பவத்தில் அரசியல் செய்து கொண்டிருக்கும் எதிர்கட்சியினர் இதனை கொள்ள வேண்டும்" இவ்வாறு தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thamilachi DMK MP Condemn to Opponent partys Kallasarayam issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->