என் உயிருக்கு பாதுகாப்பில்லை! தஞ்சையில் கூட்டு பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட இளம்பெண் பரபரப்பு புகார்! - Seithipunal
Seithipunal


தஞ்சை பாப்பாநாட்டில் கூட்டு பாலில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண், தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார்.

கடந்த மாதம் 12ஆம் தேதி பாப்பாநாடு பகுதியில் ஒரு இளம் பெண் கூட்டு பாலில் வன்கொடுமை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் 17 வயது சிறுவன் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் விசாரணையில் இந்த சம்பவத்தில் மொத்தம் 6 பேர் ஈடுபட்டது தெரியவந்தது. அதில் ஒருவன் அரசியல் கட்சியின் நிர்வாகி என்றும் சொல்லப்பட்டது.

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் இரண்டு சிறுவர்கள் உட்பட கவிதாசன் திவாகர் வேல்முருகன் பிரவீன் ஆகிய நான்கு ஆறு பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கூட்டு பாலில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட அந்த 23 வயது இளம் பெண், தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதில், "பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர்கள் ஜாமினில் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

கைதானவர்கள் ஜாமீனில் வெளியே வந்தால், தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை" என்று பாதிக்கப்பட்ட அந்தப் பெண் மாவட்ட ஆட்சியரிடம் பரபரப்பு மனு ஒன்றை அளித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thanjai Pappanadu Young Woman Abuse case


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->