தஞ்சாவூரில் டிராக்டர் கவிழ்ந்ததில் தொழிலாளி மரணம்!
thanjaur overturns tractor field laborer dies
தஞ்சாவூர்: கும்பகோணம் அடுத்த சுவாமிமலை திருவைக்காவூர் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் பாண்டியன் (வயது 36).
டிராக்டர் ஓட்டுனரான இவர், நாகை மாவட்டத்தை சேர்ந்த திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரம் நரிமேனி ஆற்றில் தடுப்பணை கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தார். நேற்று பாண்டியன் தனது டிராக்டரில் கட்டுமான பணிக்காக இரும்பு கம்பிகளை ஏற்றி சென்றுள்ளார்.
இந்நிலையில், டிராக்டரில் ஏற்றப்பட்ட இரும்பு கம்பியின் மீது மேற்கு வங்காளம் முர்ஷிதாபாத்தை சேர்ந்த ஹோகன் மொண்டல் (வயது 33), அதே பகுதியை சேர்ந்தவர்கள் ஜோடிமொய் கோஸ் (வயது 26), கோபிண்டா மொண்டல் (வயது 32), தீபன் மொண்டல் (வயது 38), கணேஷ் மொண்டல் (வயது 38) ஆகியோர் 5 பேரும் அமர்ந்து கொண்டிருந்தனர்.
திருக்கண்ணபுரம் ராமநந்தீஸ்வரர் சுடுகாடு அருகில் டிராக்டர் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, டிராக்டர் வயலில் கவிழ்ந்தது.
இதில், டிராக்டரில் சென்ற ஹோகன் மொண்டல் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றவர்கள் படுகாயம் அடைந்த நிலையில் அவசர ஊர்தி மூலம் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
English Summary
thanjaur overturns tractor field laborer dies