திமுகவின் பெரும்புள்ளி வெட்டி படுகொலை - பதற்றத்தில் இரு மாவட்டங்கள்! - Seithipunal
Seithipunal


தஞ்சை அருகே திமுகவை சேர்ந்த தொழிலதிபர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவாரூர் மாவட்டம், சோழங்கநல்லூர் பகுதி சேர்ந்தவர் பாபு. 48 வயதாகும் இவர் திமுக பிரமுகராகவும், காரைக்கால் துறைமுகத்தில் போக்குவரத்து வாகன ஒப்பந்ததாரராகவும் இருந்து வருகிறார். 

மேலும் தொழிலதிபரான இவர் இன்று தஞ்சாவூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக தனது மகனுடன் காரில் வந்துள்ளார். அப்போது திரைப்படத்தில் வரும் சண்டை கட்சி போல எதிரே வந்த கார், இவர்கள் காரை வழிமறித்து நிறுத்தி உள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த தொழிலதிபர் பாபு காரை விட்டு இறங்கி, எதிரே நின்ற காரில் உள்ளவர்களை தட்டிக் கேட்க வந்த போது, அந்த காரில் இருந்து இறங்கிய மர்ம நபர்கள் பாபுவை சரமாரியாக அறிவாளால் வெட்டி விட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பி சென்றனர். 

இதில் பலத்த காயமடைந்த பாபு சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், பாபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் பாபு தொழில் போட்டி காரணமாக தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஏற்கனவே காவல் நிலைய காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டிருப்பது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் கொலையாளிகள் யார்? பாபுவை கொலை செய்த அந்த முக்கிய புள்ளி யார்? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ஆளும் கட்சியை சேர்ந்த பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thanjavur DMK Babu Murder case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->