மதமாற்றம்? மைக்கேல்பட்டியில் கிறிஸ்தவ பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் திருப்பம்! சிபிஐ தரப்பில் பரபரப்பு வாதம்! - Seithipunal
Seithipunal


தஞ்சை மைக்கேல்பட்டியில் தனியார் கிறிஸ்தவ பள்ளி மாணவி தற்கொலை வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற கிளையில் சிபிஐ தரப்பில் பரபரப்பு வாதம் வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு மாணவி உயிரிழந்த வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது. 

இந்நிலையில், பள்ளியில் மாணவியை மதமாற்றம் செய்ய எந்த முயற்சியும் நடைபெறவில்லை என்று, நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் வாதம் வைக்கப்பட்டுள்ளது. 

மதமாற்றம் செய்ய எந்த முயற்சியும் நடக்காததால், குற்ற பத்திரிக்கையை ரத்து செய்யக்கூடாது என்று சிபிஐ தரப்பில் வாதம் வைக்கப்பட்டுள்ளது. 

மேலும், நன்கு படிக்கும் மாணவியை பிற வேலைகளை செய்ய வைத்ததால், அவர் கல்வியில் பின்தங்கி உள்ளார் என்றும் சிபிஐ தரப்பில் வாதம் வைக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து, மாணவிகளின் பெற்றோர் தரப்பில் வாதங்களை முன் வைப்பதற்காக வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்தி வைத்துள்ளது. 

முன்னதாக மதம் மாற கட்டாயப்படுத்தியதால் மாணவி தற்கொலை என்று பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டிய நிலையில், சிபிஐ தரப்பு அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது இந்த விவகாரத்தில் திருப்பமாக அமைந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thanjavur Michaelpatti student Case Madurai High Court CBI


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->