அதிமுகவை அடமானம் வைத்துவிட்டனர்..எடப்பாடி பழனிசாமி மீது கருணாஸ் விமர்சனம்!
The AIADMK has been mortgaged. Karunas criticises Edappadi Palaniswami
குற்றங்கள், ஊழல்களில் இருந்து காப்பாற்றி கொள்ள பாஜகவிடம் அதிமுகவை அடமானம் வைத்துவிட்டனர் என எடப்பாடி பழனிசாமியை கருணாஸ் விமர்சனம் செய்துள்ளார்.
தமிழகத்தில் பாஜக மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்துஅதிமுக பாஜக இடையே மோதல் போக்கு நீடித்து வந்தது .அதிமுக தலைவர்களை அண்ணாமலை விமர்சனம் செய்ய அது கடைசியில் அதிமுக பாஜக கூட்டணி முறிந்தது. மேலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பாஜகவுடன் இனிமேல் எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என பகிரங்கமாக அறிவித்தார். இதையடுத்து பாஜக அதிமுக கூட்டணியை ஒன்று சேர்க்க பாஜக மூத்த தலைவர்கள் முயற்சி மேற்கொண்டனர்.
அந்த முயற்சி சமீபத்தில் பயன் அளித்தது. சமீபத்தில் சென்னை வந்த பாஜக மூத்த தலைவர் அமித்ஷா பாஜக அதிமுக கூட்டணியை உறுதி செய்தார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் வருகின்ற 2026 சட்டசபை தேர்தலில் பாஜக அதிமுக கூட்டணி என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து அதிமுக பாஜக கூட்டணியை பல்வேறு தரப்பினரும் விமர்சனம் செய்தனர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவை பாஜகவிடம் அடகு வைத்து விட்டார் என பல்வேறு விமர்சனங்களும் எழுந்தது. இந்தநிலையில் எடப்பாடி பழனிசாமி ஒரு சந்தர்ப்பவாதி என கருணாஸ் விமர்சனம் செய்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி ஒரு சந்தர்ப்பவாதி. பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தபோது அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். ஆனால் மீண்டும் கூட்டணியை அமித்ஷா அறிவித்ததன் மூலம் குற்றங்கள், ஊழல்களில் இருந்து காப்பாற்றி கொள்ள பாஜகவிடம் அதிமுகவை அடமானம் வைத்துவிட்டனர். இந்த கூட்டணியால் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மகிழ்ச்சியாக இல்லை என சென்னை ஆலந்தூரில் முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் கருணாஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.
English Summary
The AIADMK has been mortgaged. Karunas criticises Edappadi Palaniswami