கிருஷ்ணகிரி || ஊஞ்சல் விளையாடிய 7 வயது சிறுவன்.! கழுத்தில் துணி இறுக்கி உயிரிழந்த பரிதாபம்.!
The boy playing on the swing died of strangulation in kirishnagiri
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊஞ்சல் விளையாடிய போது கழுத்தில் துணி இறுக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் மூங்கிலேரி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருடைய மனைவி அம்சவேணி. இவர்களுக்கு எஸ்வந்த்(7), அபிதா(4) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் இரண்டு குழந்தைகளும் வீட்டின் அருகே சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்தனர். அப்பொழுது ஊஞ்சலில் எஸ்வந்த் கழுத்து பகுதி எதிர்பாராத விதமாக மாட்டிக்கொண்டுள்ளது.
இதனால் எஸ்வந்த் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதைப் பார்த்த குடும்பத்தினர் உடனடியாக எஸ்வந்தை மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர், எஸ்வந்த் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்த ஊத்தங்கரை போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
The boy playing on the swing died of strangulation in kirishnagiri