போலீஸ் கண்முன்னே நடந்த கொடூரம்!!! மனநல பாதிக்கப்பட்ட நபரை அடித்துக் கொலை....
The brutality that happened in front of the police A mentally ill person was beaten to death
சென்னை தாம்பரம் பஸ் நிலையம் அருகே மனநிலை பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் நடுரோட்டில் ரகளையில் ஈடுபட்டுள்ளார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் ஒருவர் பஸ் நிலையத்திற்குச் சென்று விசாரணை நடத்திக் கொண்டு இருந்திருக்கிறார். அப்போது, திடீரென அந்த வழியாக காரில் வந்தவர்கள் , மனநிலை பாதிக்கப்பட்ட இந்த அப்பாவி நபரை சரமாரியாக தாக்கியுள்ளனர். கொடூரமாக அந்நபரைத் தாக்கியதற்கு பின்பு , தாக்குதல் செய்த நபர்கள் காணாமல் போயினர். இதில் மனநிலை பாதிக்கப்பட்ட நபர் படுகாயம் அடைந்தார்.

காவலர் கண் முன்னே நடந்த கொடூரம்:
பின்னர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காவலர் கண் முன்னே நடந்த இந்த கொலைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சந்தேகத்தின் பெயரில் 2 பேரை கைதுசெய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த விசாரணையில் மனநிலை பாதிக்கப்பட்டவரை ஏன் தாக்கினார்கள்? அவரை கொலை செய்யும் நோக்கம் என்ன? இப்படி கொலை தாக்குதலில் ஈடுபட காரணம் என்ன? இன்று அந்த விசாரணையில் பலக் கேள்விகள் எழுந்து வருகிறது. மேலும் இது குறித்து உண்மைக் காரணத்தை அறிய போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
English Summary
The brutality that happened in front of the police A mentally ill person was beaten to death