பொன் மாணிக்கவேல் மீதான வழக்கை ஒத்தி வைத்துள்ள நீதிமன்றம்..!
The court that adjourned the case against Pon Manickvel
ஒய்வு பெற்ற காவல் அதிகாரி பொன் மாணிக்கவேல் மீது, சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என ஓய்வு பெற்ற டி.எஸ்.பி காதர் பாட்ஷா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தியிருந்தார்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது; "என் மீதான புகார் மீது சிபிஐ விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் DIG அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி ஒருவர் தலைமையில் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க வேண்டும் என உத்தர விட்டது. இதனையடுத்து சிபிஐ விசாரணையை நடத்தி அதனடிப்படையில் வழக்குப் பதிவும் செய்தது.

மேலும் மதுரை மாவட்ட கூடுதல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முதற்கட்ட விசாரணை அறிக்கையின் நகலை வழங்கக் கோரி கீழமை நீதிமன்றத்தில் மனு செய்தேன். FIR-ஐ தவிர பிற ஆவணங்களை தர இயலாது எனக்கூறி மனுவை திருப்பி அனுப்பி விட்டனர். ஆகவே, என் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
குறித்த மனு மீதான விசாரணை நீதிபதி புகழேந்தி தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓய்வுபெற்ற டிஎஸ்பி, காதர் பாட்சாவின் வழக்கறிஞர் தரப்பில், உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த வழக்கில் CBI விசாரிக்க பிறப்பித்த இடைக்கால உத்தரவின் ஆன்லைனில் கிடைத்த உத்தரவு நகல் மற்றும், இந்த வழக்கில் இதற்கு முன் பிறப்பித்த பிற உத்தரவுகளை ஆதரமாக கொண்டு தான், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உத்தரவு பெற்றோம் என்றும், சிலை கடத்தலில் தொடர்புடைய சுபாஷ் கபூர் மீதான, வழக்குகளை திரும்ப பெறலாம் என உள்துறை அமைச்சகத்திற்கு, முன்னாள் IG பொன் மாணிக்க வேல், மெயில் அனுப்பி உள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பழவூர் சிலை கடத்தலின் போது ஓய்வு பெற்ற காதர் பாட்சா, சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்ற வில்லை என்றும், அதற்கு தங்களிடம் பல ஆதாரங்கள் உள்ளதாகவும், அதனால் தான் முகாந்திரம் இருந்தால் சிபிஐ விசாரிக்கலாம் என கூறி உத்தரவிடப்பட்டு இருந்தது. என வாதிட்டுள்ளார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி புகழேந்தி, முன்னரே நீங்கள் இந்த தகவல்களை கூறியிருக்கலாம் என்று கூறி, உச்சநீதி மன்றத்தில் இந்த வழக்கு விசாரணையில் இருப்பதால், வழக்கு விசாரணையை ஜூன் கடைசி வாரம் ஒத்தி வைத்து உத்தர விட்டுள்ளார்.
English Summary
The court that adjourned the case against Pon Manickvel