பெண்கள் பாதுகாப்புக்கு ஒரு துரும்பைக் கூட திமுக அரசு கிள்ளிப் போடவில்லை..அண்ணாமலை காட்டம்!  - Seithipunal
Seithipunal


இந்தியாவுக்கு முழு சுதந்திரம் கிடைத்துள்ளது என்றும்  ஆனால் தமிழ்நாட்டுக்கு முழு சுதந்திரம் இன்னும் கிடைக்கவில்லை என்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்கு ஒரு துரும்பைக் கூட திமுக அரசு கிள்ளிப் போடவில்லை என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை ஈசிஆர் சாலையில் முட்டுக்காடு பகுதியில் நள்ளிரவு நடுரோட்டில் காரை நிறுத்திய இளைஞர்கள் மற்றொரு காரில் வந்த பெண்களை துரத்திய சம்பவம் சமூகவலைதளத்தில் வீடியோவாக வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மேலும் இது தொடர்பாக  வீடியோவின் உண்மைத்தன்மை குறித்தும், இளம்பெண்களை காரில் துரத்தியது யார்? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,ஈ.சி.ஆர் பகுதியில் நடந்த சம்பவம் நெஞ்சை பதறவைக்கிறது என்றும்  தி.மு.க கட்சி கொடி கட்டிய காரில் சென்று பெண்ணிடம் மோசமாக நடந்துள்ளனர் என்றும் தி.மு.க. கொடி கட்டிய காரில் வந்து செய்த செயலை பார்க்கும்போது தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக் குறியாகவே உள்ளது என்பதற்கு இந்த சம்பவமும் ஓர் உதாரணம் என கூறினார்.

மேலும் பேசிய அண்ணாமலை ,இந்தியாவுக்கு முழு சுதந்திரம் கிடைத்துள்ளது என்றும்  ஆனால் தமிழ்நாட்டுக்கு முழு சுதந்திரம் இன்னும் கிடைக்கவில்லை என கூறினார். மேலும் இரவு, பகல் என எந்த நேரத்திலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும்   மாநில அரசு காவல் துறைக்கு பேட்ரோல் வாகனங்களை வாங்கிக் கொடுத்து ரோந்து போகச் சொல்ல வேண்டும் என்றும் கையாலாகாத தி.மு.க. அரசு பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்கு ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லைஎன  இவ்வாறு அவர் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The DMK government has not pinched a single straw for women's safety. Annamalai Kattam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->