மக்கள் விரும்பும் திமுக ஆட்சி புதுச்சேரி மாநிலத்தில் அமையும்..சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா உறுதி!
The DMK government will be formed in Puducherry Leader of the Opposition in the Assembly R Shiva confirms
புதுச்சேரியில் மக்கள் விரும்பும் திமுக ஆட்சி உதிக்கும் என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா சிவா நம்பிக்கை தெரிவித்தார்.
மாண்புமிகு கழக தலைவரும்,தமிழ்நாடு முதலமைச்சருமான தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் 72-வது பிறந்தநாளையொட்டி புதுச்சேரி மாநிலம் முழுவதும் கழகத்தினர் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், இரத்ததான முகாம் உள்ளிட்ட மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி மாநில கழகம் மற்றும் கழக மருத்துவ அணி சார்பில், மாநில மருத்துவர் அணி அமைப்பாளர் ஆனந்த் ஆரோக்கியராஜ் ஏற்பாட்டில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் உருளையன்பேட்டை தொகுதிகுட்பட்ட காந்தி வீதி, கண்ணையா பிசினஸ் சென்டர் வளாகத்தில் நடைபெற்றது. மருத்துவ முகாமில் உருளையன்பேட்டை தொகுதி கழக செயலாளர் இரா. சக்திவேல் வரவேற்புரை ஆற்றினார்.
தலைமை பொதுக்குழு உறுப்பினர் எஸ். கோபால் முன்னிலையில் நடைபெற்ற மருத்துவ முகாமினை, மாநில கழக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சிவா அவர்கள் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இந்த முகாமில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பியல் அறுவை சிகிச்சை, மகளிர் மருத்துவம், குழந்தை மருத்துவம், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் தொடர்பான பரிசோதனைகள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சேவைகள் மற்றும் மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன. இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
முகாமை தொடங்கி வைத்து பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா அவர்கள், இத்தகைய மக்கள் நலப் பணிகள் மூலம், திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து பொதுமக்களின் நலனுக்காக உழைத்து வருகிறது. புதுச்சேரியில் பொதுமக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சைகள் கிடைப்பதில்லை. கலைஞரின் காப்பீட்டுத்திட்டம் போல புதுச்சேரியில் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படவில்லை. பிரதமர் மோடி கொண்டு வந்த ஆயுஷ்மான் காப்பீட்டுத்திட்டத்தால் புதுச்சேரியில் யாரும் பயன்பெறவில்லை. காப்பீட்டு திட்டத்தில் பயனாளிகளுக்கு கிடைக்கப்பெறும் தொகை அதிகப்படுத்திய போதும், அதனால் எந்த ஆதாயமும் பயனும் மக்களுக்கு இல்லை. ஆனால், திராவிட மாடல் ஆட்சிபுரியும் தமிழ்நாட்டில் தளபதியாரின் வழிகாட்டுதலில் புதுச்சேரி மக்களுக்கு ஆதரவு கரம் நீட்டிய தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் நம் மக்களுக்கு இங்கு கிடைக்காத அல்லது மறுக்கப்படும் சிகிச்சைகளுக்கு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிறப்பான நவீன மருத்துவ சிகிச்சையளிக்க முன்வருவதாக உறுதியளித்துள்ளார் என்று குறிப்பிட்டு பேசிய அவர், புதுச்சேரியில் மக்கள் விரும்பும் கழக ஆட்சி உதிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
மருத்துவ முகாமில் அவைத்தலைவர் எஸ்.பி. சிவக்குமார், மாநில கழக துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., மாநில கழக பொருளாளர் ஆர். செந்தில்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மூர்த்தி, நந்தா சரவணன், துணை அமைப்பாளர் தைரியநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஜே.வி.எஸ் சரவணா, சக்திவேல், பொதுக்குழு உறுப்பினர்கள் தங்கவேலு, பிரபாகரன், செந்தில், அமுதாகுமார், தொகுதி செயலாளர்கள் சீதாராமன், நடராஜன், வடிவேலு, சிவக்குமார், ராஜாராம், ராஜா, ஆறுமுகம், சவுரி, இலக்கிய அணி அமைப்பாளர் சீனு மோகன்தாஸ், சிறுபான்மையினர் அணி அமைப்பாளர் ஹாலித், மகளிர் அணி அமைப்பாளர் காயத்ரி ஸ்ரீகாந்த், மகளிர் தொண்டரணி அமைப்பாளர் சுமதி, மாணவர் அணி அமைப்பாளர் மணிமாறன், ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் செல்வநாதன், விளையாட்டு மேம்பாட்டு அணி ரவிச்சந்திரன், இளைஞரணி துணை அமைப்பாளர்கள் நித்திஷ், முகிலன், கிருபா, தாமரைகண்ணன், ரெமி மற்றும் உருளையின்பேட்டை கழக நிர்வாகிகள் சசிகுமார், மாறன், கிரி, மதிமாறன், கண்ணதாசன், புருஷோத், ஸ்ரீதர், தமிழ்மணி, தேவேந்திரன், ராமு மற்றும் கலிமுல்லா உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
English Summary
The DMK government will be formed in Puducherry Leader of the Opposition in the Assembly R Shiva confirms