''ஆட்சிக்கு வர வேண்டும் என்று நாம் நினைப்பது மக்களின் நலனுக்காக மட்டுமே'' தவெக தலைவர் விஜய்..!
We think that we should come to power only for the welfare of the people TVK leader Vijay
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் 2026 நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான முன்னேற்பாடு பணிகளை மும்முரமாக ஈடுப்பட்டு வருகிறார். இதற்காக அவர் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கை நடத்தவுள்ளார்.
அதன்படி கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் ஆகிய 07 மாவட்டங்களை சேர்ந்த த.வெ.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கு கோவை அருகே குரும்பபாளையத் தில் உள்ள சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கு இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்றுள்ளார். அங்கு தவெக நிர்வாகிகள் விஜய்க்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். அப்போது தவெக மாவட்டச் செயலாளர்களுக்கு 'வாக்குச்சாவடி வியூகம்' என்ற கையேட்டை வழங்கினார். இதனைத் தொடர்ந்து கருத்தரங்கில் பேசிய விஜய், 'மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வர யாரையும் விடமாட்டோம்' என்று கூறினார்.
தொடர்ந்து அங்கு பேசிய விஜய் கூறியதாவது: "கோவை என்றாலும் கொங்கு பகுதி என்றாலும் இந்த மண்ணின் மரியாதைதான் முதலில் நினைவுக்கு வரும்...மக்களிடம் வாக்கு எப்படி வாங்கப் போகிறோம் என்பதற்கான பட்டறை இல்லை. மக்களோடு மக்களாக பழக வேண்டும் என்பதற்கான பட்டறை... இது வோட்டுக்காக மட்டும் மாநாடு இல்லை.. மக்களோடு மக்களாக நாம் எப்படி ஒன்றிணையப் போகிறோம் என்பதற்காகத்தான் இந்த பயிற்சி பட்டறை... இதற்கு முன்னர் இங்கு பலர் வந்து மக்களை ஏமாற்றி பொய்களை சொல்லி இருக்கலாம். இனி அது நடக்காது...

ஆட்சிக்கு வர வேண்டும் என்று நாம் நினைப்பது மக்களின் நலனுக்காக மட்டுமே; இனிமேல் மக்களை ஏமாற்றி யாரும் ஆட்சிக்கு வர முடியாது.. நீங்கள் ஒவ்வொருவரும் போர் வீரருக்கு சமம். நாம் எப்படிப்பட்ட ஆட்சி அமைப்போம் என்பதை மக்களிடம் சொல்லுங்கள்... நம்மிடம் என்ன இல்லை? மனதில் நேர்மை, கரை படியாத அரசியல் கைகள், உழைக்க உடம்பில் தெம்பு உள்ளது...களம் ரெடியாக உள்ளது, போய் கலக்குங்கள்.. நன்றி வணக்கம்" என்று தமிழக வெற்றிக்கழக கருத்தரங்கில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசினார்.
English Summary
We think that we should come to power only for the welfare of the people TVK leader Vijay