தொகுதி விட்டு தொகுதிக்கு பஞ்சாயத்துக்கு போன திமுக எம்எல்ஏ! வீடியோ வெளியாகி வைரல்! - Seithipunal
Seithipunal


திமுக எம்எல்ஏ எஸ்ஆர்.ராஜா தனியார் கம்பெனியில் புகுந்து மிரட்டும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியில் பூஜா கோயல் என்பவருக்கு சொந்தமான 1.77 ஏக்கர் நிலம் உள்ளது. கடந்த 2018 முதல் 2028 ஆம் ஆண்டு வரை 10 வருடம் குத்தகைக்கு டேஜங் மோபார்ட்ஸ் என்ற நிறுவனம் எடுத்துள்ளது. நிலத்தின் உரிமையாளர் பூஜா கோயல் சம்பந்தப்பட்ட நிறுவனத்தை வெளியேறுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் கம்பெனி நிர்வாகத்தினர் குத்தையை காலம் முடியும் முன்பு கம்பெனியை காலி செய்ய முடியாது என திட்டவட்டமாக சொல்லி உள்ளனர்.

இதுதொடர்பாக கடந்த மாதம் மறைமலைநகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்து வருகிறனர். நிலத்தின் உரிமையாளரான பூஜா கோயல் தாம்பர திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர் ராஜாவை அணுகி தனியார் நிறுவனத்தை காலி செய்து தருமாறு கேட்டுள்ளார்.

அந்த நிறுவனத்திற்கு வந்த தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர் ராஜா இந்த பிரச்சினை தொடர்பாக அந்நிறுவன அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளார். இந்த பேச்சுவார்த்தையில் இரு தரப்பினருக்கும் இடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. எஸ்.ஆர் ராஜா கம்பெனி நிர்வாகிகளை ஆபாசமாக பேசியும் கை கால்களை உடைத்து விடுவதாகவும் மிரட்டும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது. தாம்பரம் தொகுதியின் திமுக சட்டமன்ற உறுப்பினராக உள்ள எஸ்ஆர் ராஜா சம்பந்தமே இல்லாத செங்கல்பட்டு மறைமலைநகரில் உள்ள நிறுவனத்தின் அதிகாரிகளை மிரட்டும் தோணியில் பேசியுள்ளது மற்ற நிறுவனங்களுக்கும் அச்சுறுத்தலாக மாறும் என சமுக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The footage of DMK MLA SR Raja entering a private company and threatening


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->