பராமரிப்பின்றி காணப்படும் இந்திய ரிசர்வ் பட்டாலியன் ஆயுதக் கிடங்கு..விழித்துக்கொள்ளுமா புதுச்சேரி அரசு?
The Indian Reserve Battalion armoury is in a state of disrepair Will the Puducherry government wake up
புதுச்சேரியில் உள்ள இந்திய ரிசர்வ் பட்டாலியன் ஆயுதக் கிடங்கு பராமரிப்பும் இல்லாமல் மேற்புற கூரைகள் ஆங்காங்கே திடீரென்று சிறு சிறு துண்டுகளாக கீழே விழுகிறது.இதனால் அங்கு பணிபுரியும் காவலர்கள் பயத்துடன் இருக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி காவல்துறையில் இந்திய ரிசர்வ் பட்டாலியன் படைப்பிரிவில் காவலர்கள் முதல் அதிகாரிகள் வரை உள்ள பணிபுரியும் அவர்களுடைய துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் பாதுகாப்பாக வைப்பதற்காக இந்திய ரிசர்வ் பட்டாலியன் ஆயுதக் கிடங்கு ஓன்று உள்ளது.இந்த ஆயுதக் கிடங்கு சுமார் 20 ஆண்டுகாலமாக ஒரே கட்டிடத்தில் எந்தப் பராமரிப்பும் இல்லாமல் இயங்கிவருகிறது.
தற்போது இந்தக்கட்டிடம் பாழடைந்து மோசமான நிலையில் இருக்கிறது. இப்போது கட்டடத்தின் மேற்புற கூரைகள் ஆங்காங்கே திடீரென்று சிறு சிறு துண்டுகளாக கீழே விழுகிறது. இதுவரை எந்த உயிர் சேதமும் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. இது சம்பந்தமாக பலமுறை மேல் அதிகாரிகளும் புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காத்து வருகிறார்கள்.
இந்த ஆயுதக் கிடங்கு கட்டிடத்திற்கு உள்ளே சேதம் அடைந்த வருவதால் உயிரை பாதுகாத்துக் கொள்ள அதிகாரிகள் மட்டும் தன்னுடைய அலுவலகங்களை மாற்றி விட்டார்கள். ஆனால் ஆயுதக் கிடங்கு பராமரிக்கும் மற்றும் பாதுகாக்கும் காவலர்கள் மட்டும் இங்கேயே பணி செய்து கொண்டு வருகிறார்கள். இதனால் அங்கு பணிபுரியும் காவலர்கள் பயத்துடன் இருக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் ஐ.ஆர்.பின் ஆயுதக் கிடங்கை புதிய கட்டிடத்திற்கு மாற்றியமைக்க வேண்டும் என ஐ.ஆர்.பின் காவலர்களுடைய அனைவருக்கும் கோரிக்கையாக இருக்கிறது.
English Summary
The Indian Reserve Battalion armoury is in a state of disrepair Will the Puducherry government wake up