மருத்துவர் கத்திக் குத்தில் அடுத்த பரபரப்பு!... 5 பிரிவுகளில் அதிரடியாக பாய்ந்த வழக்கு! - Seithipunal
Seithipunal


சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில்,  தனது தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி, அங்கு பணியாற்றி வந்த மருத்துவர் பாலாஜிக்கு கத்தி குத்து நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, கத்தியால் குத்திய விக்னேஷ் என்பவரை போலீசார் கைது செய்த நிலையில், மருத்துவமனையை சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பின்னர் இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் வந்து பார்வையிட்டார்.

பின்னர், அரசு மருத்துவரின்  உடல்நிலை குறித்து கேட்டறிந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், மருத்துவரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும், மருத்துவர் பாலாஜியின் தலைப் பகுதியில் 4 இடங்களில் காயம் உள்ளதாக தெரிவித்த அவர்,  உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இந்த நிலையில், அரசு மருத்துவர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய விக்னேஷ் மீது கொலை முயற்சி, ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The next sensation in the doctor stabbing the case flowed in 5 sections


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->