வழித்தடத்தால் வந்த பிரச்சனை.. இரண்டு தரப்பினர் இடையே கடும் வாக்குவாதம்.! - Seithipunal
Seithipunal


சேலம் அருகே நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு செல்லும் முக்கிய பாதையில் மண்ணைக் கொட்டி தடுத்த நபர்களால் இரண்டு தரப்பினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

சேலம் உத்தமசோழபுரம் பகுதியில் அம்மையப்பா நகர் என்ற பகுதியில் ஆயிரத்திற்கு மேற்பட்ட வீடு மனைகளாக பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு விவசாய நிலத்தை தங்கவேல் என்ற நிலத்தின் உரிமையாளர் தங்கவேலிடம் பவர் பெறப்பட்டு, வீட்டுமனைகள் பிரிக்கப்பட்ட விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனிடையே நிலத்தின் உரிமையாளர் பவர் கொடுத்த தங்கவேல் உயிரிழந்த நிலையில் அவரது உறவினர்கள் நிலம் தங்களுக்கு சொந்தமானது என்று கூறி, மக்களை வெளியே வரவிடாமல் தடுப்பதாக வீடு கட்டி குடியிருக்கும் மக்கள்  குற்றம்சாட்டியுள்ளனர்.

இங்கு ஏராளமான பொதுமக்கள் நிலத்தை வாங்கி வீடுகட்டி குடியிருக்கும் நிலையில் அம்மையப்பா நகர் செல்லும்  முக்கிய சாலையில் மண்ணைக் கொட்டி தடுப்பு ஏற்படுத்தி பிரச்சனையில் ஈடுபடுவதாக நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அரசு அதிகாரிகள் நேரடியாக வருகை தந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அரசு அதிகாரிகளிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் பாதிக்கப்படும் மக்கள் பிரச்சனைகள் குறித்து மனுக்களை அதிகர்களிடம் வழங்கும்படி அறிவுறுத்தல் வழங்கினர். இதுதொடர்பாக பதிவாளர் அலுவலகத்தில் உள்ள ஆவணங்களில் விற்பனை செய்த இடத்தை தவிர்த்து மற்ற இடத்தை நிலத்தின் உரிமையாளர் பயன்படுத்தலாம் என்று பத்திரப்பதிவில் இடம் பெற்றுள்ளது.இந்த இடத்தை பணம் கொடுத்து வாங்கி வீடு கட்டி  பயன்படுத்தி வரும் நிலையில் இந்த வீடு கட்டுவதற்கு அனுமதி கொடுத்து கையெழுத்து போட்டு தந்தனர். எனவே அரசு நடவடிக்கை எடுத்து எங்கள் இடத்தையும் வழித்தடத்தையும் மீட்டு தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மற்றொரு தரப்பினர் கூறுகையில், தங்களின் நிலத்தை விற்பனை செய்த பாதி நிலத்தை கிரயம் செய்த நிலையில் மீதமுள்ள நிலத்தை கிரயம் செய்யாமல் உள்ளனர். கிரையம் செய்யாத இடத்தை மீண்டும் வழங்கும் படி கேட்ட நிலையில் நிலத்தை தர மறுத்து மிரட்டுவதாக தெரிவித்தனர்.ஐந்து தலைமுறையாக இந்த இடத்தில் வசித்து வருவதாகவும் அதற்கான உரிய ஆவணங்கள் வைத்திருக்கும் நிலையில் நிலத்தை அபகரித்துக் கொண்டு தர மறுப்பதாக குற்றம் சாட்டினர்.  இரண்டு தரப்பையும் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அரசு அதிகாரிகள் தெரிவித்ததாக கூறினர். இந்த நிலையில் தங்கள் ஆவணங்கள் அனைத்தும் அரசு அலுவலர்களிடம் ஒப்படைத்துள்ளதாகவும் தனது இடத்தை கிரயம் செய்து கொண்டு அதற்குரிய பணத்தைத் தரும்படி கூறினர். குறிப்பாக வழித்தடம் தங்களின் பெயரில் தான் உள்ளதாகவும் அந்த வழித்தடத்தை அரசிற்கு வழங்கும்படியும் கேட்டு வந்ததாக கூறினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The problem with the route A heated argument between the two sides


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->