நடமாடும் வாகனங்கள் சேவை....கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில்,  கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 200 நடமாடும் வாகனங்கள் சேவைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தும், பயனாளிகளுக்கான ஆணைகளையும் வழங்கி வருகிறார். அதன் ஒரு பகுதியாக  சென்னை  தலைமைச் செயலகத்தில்  இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில்,கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 200 நடமாடும் வாகனங்கள் சேவைகளை,  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதற்கிடையேயே தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் அரசுப் பணிகளில் பணியாற்ற பணியமர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம், கருவூலக் கணக்குத்துறை பதவிகளுக்குக்கு தேர்வாகியுள்ளவர்களுக்கும், பணிக்காலத்தில் மறைந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The service of mobile vehicles was flagged off by chief Minister MK Stalin


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->