தொடரும் இலங்கை கடற்படையின் அத்துமீறல்.. மேலும் 14 மீனவர்கள் கைது..! - Seithipunal
Seithipunal


தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர்.

ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று முன்தினம் எட்டு விசைப்படகுகள் மூலம் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை சிறை பிடித்தனர்.

இதனை அடுத்து முதல்வர் ஸ்டாலின் தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்நிலையில், யாழ்ப்பாணம் அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் பொழுது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமநாதபுரத்தை சேர்ந்த 14 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்று கைது செய்யப்பட்டனர். அடுத்தடுத்து இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் 69 பேர் சிறைபிடிப்பு பட்ட சம்பவம் மீனவ கிராமங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடற்படையின் இந்த அட்டூழிய மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மீனவர்களின் கோரிக்கையாக உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The Sri Lankan Navy arrested 14 fishermen


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->