சென்னை ரயில்வே கோட்டத்தில், ஓடும் ரயில்களில் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம்.! மூன்று ஆண்டுகளில் 2,219 போ் மீது வழக்கு.! - Seithipunal
Seithipunal


சென்னை ரயில்வே கோட்டத்தில் ஓடும் ரயில்களில் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் தொடர்பாக மூன்று ஆண்டுகளில் 2219 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை ரயில்வே கோட்டத்தில் பாதுகாப்பு விதியை மீறி ரயில் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணித்தல் தொடர்பாக கடந்த 2020ஆம் ஆண்டில் 965 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 3,79,700 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து 2021ல் 800 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 3,57,100 ரூபாய் அபராதமும், நடப்பாண்டு 2022ல் ஏப்ரல் மாதம் வரை 364 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 1,44,300 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரயில் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் தொடர்பாக மூன்று ஆண்டுகளில் 2,219 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 8,81,100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து சென்னை கோட்ட ரயில்வே அதிகாரிகள், ரயில்களில் பயணத்தில் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணித்தோா் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக, ஆா்.பி.எஃப். சாா்பில் பல்வேறு குழுக்கள் அமைத்து, ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

the train travels hanging on the stairs


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->