நியமன சட்டமன்ற உறுப்பினர்களின் ஓட்டுரிமையை ரத்து செய்ய வேண்டும்..பத்து ரூபாய் சட்ட இயக்கம் வலியுறுத்தல்!
The voting rights of nominated legislators should be revoked Ten rupee legal movement urges
புதுச்சேரியில் உள்ள மூன்று நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்களின் முதல்வரை தேர்வு செய்யும் ஓட்டுரிமையை ரத்து செய்ய வேண்டும் என்றும் அதற்கான சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி இந்திய குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெற வேண்டும் என புதுச்சேரி பத்து ரூபாய் சட்ட இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
புதுச்சேரி பத்து ரூபாய் சட்ட இயக்கம் சார்பில் 14 .03.2025 தேதி மாலை 4.00 மணியளவில் மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் திரு. ரங்கசாமி அவர்களை சந்தித்து மனு அளித்தனர். அப்போது அந்த மனுவில் கூறியிருப்பதாவது:புதுச்சேரியில் உள்ள மூன்று நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்களின் முதல்வரை தேர்வு செய்யும் ஓட்டுரிமையை ரத்து செய்ய வேண்டும். அதற்கான சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி இந்திய குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெற வேண்டி. ஏனென்றால் ஜனநாயக முறையில் மக்களால் தேர்வு செய்யும் 30 சட்டமன்ற உறுப்பினர்கள். அதில் 16 சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து முதல்வரை தேர்வு செய்ய வேண்டும் இதுதான் சட்டம். கடந்த 10 ஆண்டு காலமாக புதுச்சேரியில் ஆட்சி அமைப்பதற்கு முன்பே மூன்று நியமன சட்டமன்ற உறுப்பினர்களை நியமனம் செய்து முதல்வரை தேர்வு செய்ய ஓட்டுரிமை அளிக்கப்படுகிறது. மத்திய அரசு கூட்டணியில் உள்ள கட்சியில் 14 சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களால் தேர்வு செய்தால் போதும் ஏனென்றால்.
சட்டத்துக்கு புறம்பாக மக்களுக்கு எதிராக மூன்று நியமன சட்டமன்ற உறுப்பினர்களை வைத்து புதுச்சேரி ஆட்சி மாற்றம் செய்கிறது. ஏனென்றால் 14+3= 17 ஆக உள்ளது. அதை வைத்து பெரும்பான்மை உள்ளது போல் ஆட்சி அமைக்கப்படுகிறது. புதுச்சேரி முதலமைச்சர் அவர்களின் பரிந்துரை அடிப்படையில் மூன்று நியமன சட்ட மன்ற உறுப்பினர்களை நியமனம் செய்ய வேண்டும். இல்லை என்றால் புதுச்சேரியில் மத்திய அரசு 30 நியமன சட்டமன்ற உறுப்பினர்களை நியமனம் செய்ய வேண்டும் மக்கள் வரிப்பணம் தேர்தல் என்ற முறையில் வீண் செலவு செய்ய தேவையில்லை.
ஏனென்றால் மக்களால் தேர்வு செய்யப்படுவர் ஆட்சி அமைக்க முடியவில்லை . நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் இந்திய குடியரசு தலைவரை தேர்வு செய்வதற்கு அவர்களுக்கு ஓட்டு உரிமை இல்லை. ஆனால் மாநிலத்தில் முதல்வர் தேர்வு செய்ய ஓட்டுரிமை அளிக்கப்படுகிறது இதனால் மக்கள் மனதை புண்படுத்தும் விதமாக ஜனநாயகத்திற்கு எதிராக உள்ளது அவர்களுடைய ஓட்டுரிமையை ரத்து செய்ய வேண்டி மாண்புமிகு ஐயாவிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது இது சம்பந்தமாக அடுத்த கட்ட நடவடிக்கையாக புதுச்சேரி பத்து ரூபாய் சட்ட இயக்கம் சார்பில் மாண்புமிகு இந்திய குடியரசு தலைவரிடம் அடுத்தபடியாக கோரிக்கை வைக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த சந்திப்பின்போது ரகு என்கின்ற ரகுநாதன் நிறுவனர் மற்றும் சையத் அமீர் லோகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
English Summary
The voting rights of nominated legislators should be revoked Ten rupee legal movement urges