பாலியல் தொழில் நடத்தி வந்த பெண் கைது! போலீசார் விசாரணை! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள நந்தனம், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில் ஸ்பா ஒன்று செயல்பட்டு வருகிறது.

இளம் பெண்களை வைத்து இந்த ஹோட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களை கவர்ந்து, பாலியல் தொழில் நடந்து வருவதாக விபசார தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் ராஜலட்சுமிக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து, அந்த ஸ்பா மீது நடவடிக்கை எடுக்கும்படி விபசார தடுப்பு பிரிவு-1 இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமிக்கு உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து ஹோட்டலுக்கு நேற்று முன்தினம் வாடிக்கையாளர்கள் போல் சென்று ஸ்பா நிலையத்தை கண்காணித்தபோது போது, சந்தேகம் படும் வகையில் வாலிபர்கள் சிலர் வந்து சென்றது தெரியவந்தது. அதைதொடர்ந்து அதிரடியாக ஸ்பா நிலையத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். 

இந்நிலையில், பம்மல் பசும்பொன் நகர் தேவராஜ் தெருவை சேர்ந்த அம்மு (34) என்பவர், ஏழ்மையில் அவர் கல்லூரி படிப்பை தொடர முடியாததால் தொழிலதிபர்கள் வீடுகளில் வீட்டு வேலை பார்த்து வரும் இளம்பெண்களை அழைத்து வந்து பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து போலீசார், பாலியல் தொழில் நடத்தி வந்த அம்மு என்ற பெண்ணை கைது செய்தனர்.  பாலியல் தொழில் செய்ய பயன்படுத்திய பட்டதாரி இளம்பெண்கள் 4 பேர் அம்முவிடம் இருந்து  மீட்கப்பட்டனர். பின்னர், வாடிக்கையாளர்களுக்கு இளம்பெண்கள் புகைப்படம் எடுத்து அனுப்பு பயன்படுத்திய 2 செல்போன்களும் மீட்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The woman who was running a sex business was arrested Police investigation


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->