சிறுமியை வன்கொடுமை செய்து  கொன்ற வாலிபர்.. என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை! - Seithipunal
Seithipunal


வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை கடத்தி சென்று கற்பழித்து கொன்ற வாலிபரை போலீசார்  என்கவுண்ட்டரில் சுட்டுக்கொன்றனர்.

கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டம் யாதவாடா பகுதியை சேர்ந்த தம்பதிக்கு  5 வயதில் மகள் இருந்தாள். சம்பவம் நடந்த அன்று  வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்த சிறுமி காணாமல் போய்விட்டாள். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியை  பல இடங்களில் தேடினார். அப்போது அங்குள்ள பாழடைந்த வீட்டின் கழிவறையில் உடலில் காயங்களுடன் சிறுமி பிணமாக கிடந்தது தெரியவந்தது.

இதையடுத்து இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை மர்மநபர் கடத்தி சென்று கற்பழித்து கொன்றது தெரியவந்தது.

மேலும்  கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.  அவர், பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த கூலி தொழிலாளி ரித்தேஷ் குமார் (வயது 35) என்பது தெரியவந்தது. அவன் சிறுமியிடம் சாக்லெட் கொடுப்பதாக கூறி கடத்தி சென்று கற்பழித்து கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து அவர் தங்கியிருந்த இடத்துக்கு  போலீசார், அழைத்து சென்று விசாரணை நடத்தியபோது திடீரென்று கீழே கிடந்த கற்களை எடுத்து போலீசார் மீது வீசி ரித்தேஷ் குமார் தாக்குதல் நடத்தினார். இதில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ,2 போலீசார் காயம் அடைந்தனர்.

அப்போது சப்-இன்ஸ்பெக்டர் அன்னப்பூர்ணா தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து தற்காப்புக்காக சுட்டதில்  ரித்தேஷ் குமாரின் மார்பில் குண்டு பாய்ந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The young man who raped and killed the girl Shot dead in encounter


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->