அதிர்ச்சி திருப்பம்! தேனி நர்சிங் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை புகார் தவறானது - எஸ்பி பரபரப்பு பேட்டி!
Theni College Girl Abuse Case Dindigul SP Statement
தேனி நர்சிங் மாணவி அளித்த பாலியல் வன்கொடுமை புகார் தவறானது என்று, திண்டுக்கல் எஸ்பி பிரதீப் பேட்டி அளித்துள்ளார்.
மாணவி மன அழுத்தம் காரணமாக தவறான புகார் அளித்துள்ளார் என்றும், திண்டுக்கல் எஸ்பி பேட்டி அளித்துள்ளார்.
தன்னை காரில் கடத்திக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக நர்சிங் மாணவி புகார் அளித்த நிலையில், போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாணவி அனுமதிக்கப்பட்ட நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் மனைவியிடம் நடத்தப்பட்ட விசாரணைக்கு பின்னர், அவர் கடத்தப்படவில்லை என்பது தெரிய வந்தது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை தன்னை 4 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், பின்னர் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் தன்னை இறக்கிவிட்டு சென்றதாகவும் மாணவி புகார் அளித்து இருந்தார்.
நேற்று இரவு மாணவிக்கு வலிப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Theni College Girl Abuse Case Dindigul SP Statement