குடிநீர் இணைப்பு கட்.!! கட்டுகட்டாக லஞ்சம் கேட்டு அடம்.!! வசமாக சிக்கிய அரசு மருத்துவ கல்லூரி டீன்.!! - Seithipunal
Seithipunal


தேனி அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியின் முதல்வராக மீனாட்சிசுந்தரம் என்பவர் இருந்து வருகிறார். இதே மருத்துவமனையில் மாரிசாமி என்பவர் ஆண்டுதோறும் புதுப்பிக்கும் வகையில் கடந்த 12 வருடங்களாக கேண்டீன் நடத்தி வருகிறார். அந்த ஒப்பந்தத்தின் படி மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் கேண்டீனுக்கு மூன்று குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டும். 

மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்படுபவர்களுக்கு நாள்தோறும் 24 மணி நேரமும் இலவசமாக சுடு நீர் வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக மாரிசாமி நடத்தி வந்த கேண்டினைக்கு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் நாள் ஒன்றுக்கு 3 டிராக்டர் குடிநீர் வீதம் மாரிசாமி விலை கொடுத்து வாங்கி மருத்துவமனையின் கேண்டீன் மற்றும் நோயாளிகளுக்காக வாங்கியுள்ளார். இதனால் நாள் ஒன்றுக்கு மாரிச்சாமிக்கு ரூ. 6,000 கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. 

இதனால் மனவேதனையில் இருந்த மாரிசாமி தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வரை நேரில் சந்தித்து பேசி உள்ளார். அப்போது மருத்துவ கல்லூரியின் முதல்வர் மீனாட்சிசுந்தரம் 20 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

இதனால் கேண்டீன் ஒப்பந்ததாரர் மாரிசாமி தேனி அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் மீனாட்சி சுந்தரத்திற்கு இரண்டு தவணைகளாக ரூ.16 லட்சம்  வழங்கியுள்ளார். குறிப்பாக அரசு மருத்துவமனையில் முதல்வர் அறையில் வைத்து மீனாட்சி சுந்தரத்திற்கு 10 லட்சம் ரூபாயும், மீனாட்சி சுந்தரத்தின் வீட்டில் வைத்து 6 லட்சம் ரூபாயும் என 16 லட்சம் ரூபாய் லஞ்ச பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

தேனி அரசு கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் லஞ்ச பணம் பெற்றுக் கொண்டு முறையாக குடிநீர் விநியோகம் வழங்கவில்லை. மொத்தமுள்ள 3 இணைப்புகளில் ஒரு இணைப்பு மட்டுமே மீனாட்சி சுந்தரம் கேண்டினுக்கு வழங்கி உள்ளார். மேலும் கேண்டினுக்கு வழங்கப்பட்ட இடத்தை விட கூடுதல் இடத்தை ஆக்கிரமிப்பு செய்து உணவகம் செயல்பட்டு வருவதாக மீனாட்சி சுந்தரம் ஒப்பந்ததாரர் மாரிசாமிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனால் கடுப்பான மாரிசாமி தற்பொழுது அரசு கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரத்திடம் ரூ.16 லட்சம் லஞ்சம் கொடுத்ததாக கூறப்படும் வீடியோவை ஆதாரமாக வெளியிட்டுள்ளார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் மாரிசாமி வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Theni Govt hospital principal received bribe from canteen contractor


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->