#தேனி || லஞ்சம் வாங்கிய அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் பணியிடை நீக்கம்.!!
Theni Govt medical college principal who took bribe removed
தேனி மாவட்ட அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியின் முதல்வர் மீனாட்சிசுந்தரம் இதே மருத்துவமனையில் ஆண்டுதோறும் புதுப்பிக்கும் வகையில் கடந்த 12 வருடங்களாக கேண்டீன் நடத்தி வந்த மாரிசாமி என்பவரிடம் ரூபாய் 20 லட்சம் லஞ்சம் கேட்டு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
கேண்டீன் ஒப்பந்தத்தின் படி மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் கேண்டீனுக்கு மூன்று குடிநீர் இணைப்புகள் வழங்காமல் துண்டித்ததால் தொழில் செய்ய முடியாத வேதனையில் இருந்த மாரிசாமி தேனி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் மீனாட்சி சுந்தரத்திற்கு இரண்டு தவணைகளாக ரூ.16 லட்சம் வழங்கியுள்ளார்.
தேனி அரசு மருத்துவமனையில் முதல்வர் அறையில் வைத்து மீனாட்சி சுந்தரத்திற்கு 10 லட்சம் ரூபாயும், மீனாட்சி சுந்தரத்தின் வீட்டில் வைத்து 6 லட்சம் ரூபாயும் என 16 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய தொடர்பான வீடியோவை மாரிசாமி வெளியிட்டிருந்தார்.
இந்த விவகாரம் பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில் அரசு அதிகாரிகள் மூலம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் லஞ்சம் பெற்றதற்கான முகாந்திரம் இருந்ததால் அவர் தற்பொழுது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் மீனாட்சி சுந்தரம் மீது துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டு உள்ளார்.
English Summary
Theni Govt medical college principal who took bribe removed