தேனி அருகே கோயிலில் வைத்து குழந்தைங்களுக்கு பாலியல் தொல்லை - பூசாரி கைது! - Seithipunal
Seithipunal


தேனி அருகே குழந்தைகளை கோவிலுக்குள் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த பூசாரியை போலீசார் சுற்றி வளர்த்து கைது செய்துள்ளனர்.

கோவிலுக்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்த இரண்டு குழந்தைகளை, இனிப்பு கொடுத்து கோவிலுக்குள் அழைத்துச் சென்ற பூசாரி திலகர் என்பவர், அந்த குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். 

இது குறித்து அந்த குழந்தைகள் தங்களின் பெற்றோரிடம் தெரிவிக்கவே, கோவிலுக்கு முன் திரண்ட பொதுமக்கள், பூசாரியை தாக்க முற்பட்டுள்ளனர்.

இதனால் பயந்து போன பூசாரி திலகர், கோவிலுக்கு உள்ளே சென்று தப்பிக்க முயற்சித்து உள்ளார். இது குறித்து பொதுமக்கள் பெரியகுளம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், திலகரை பொதுமக்களிடமிருந்து மீட்டு காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

பின்னர் குழந்தைகளின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பூசாரி திலகர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Theni Poosari Arrest


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->