வாஜ்பாயின் பட்ஜெட் என மீண்டும் உளறி கொட்டிய திண்டுக்கல் சீனிவாசன்!! குழப்பத்தில் செய்தியாளர்கள்!! - Seithipunal
Seithipunal


எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திண்டுக்கல் அருகே நத்தம் பகுதியில் அதிமுக சார்பில் நடைபெற்றது. இதில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு, " ஜெயலலிதா பொங்கல் பரிசாக குடும்ப அட்டைக்கு ரூ.100 வழங்கினார். 

ஆனால், தற்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ரூ.1000 வழங்கியுள்ளது மிகவும் மகிழ்ச்சியான செய்தியாகும்.

சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ள வாஜ்பாய் பட்ஜெட் மிக அருமையாக உள்ளது. இந்த பட்ஜெட் நன்றாக உள்ளது என முதல்வர் எடப்பாடி வரவேற்று உள்ளார். என கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதனை தொடர்ந்து, பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் பொதுமக்கள் பாதிப்படையவில்லை. கருப்பு பணம் வைத்திருந்தவர்கள் தான் பாதிக்கப்பட்டனர்" என பேசியுள்ளார்.  

நிதி அமைச்சர் (பொறுப்பு) பியூஸ் கோயல் பட்ஜெட் தாக்கல் செய்தார். ஆனால், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் எனவும், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை டெல்லிக்கு போய் பிரதமர் நரசிம்மராவுடன் உட்கார்ந்து பேசுவார் என்றும், 

பிரதமர் மோடிக்கு பதிலாக மன்மோகன் சிங் என்றும் பாரத ரத்னா எம்.ஜி.ஆர். என்பதற்கு பதில் பாரத பிரதமர் எம்.ஜி.ஆர் என்றும் சகட்டுமேனிக்கு உளறியவாறு பேசி குழப்பிவருகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thindukkal srinivasan says vajbai budget


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->